தமிழக செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தடகள வீராங்கனைக்கு கனிமொழி பாராட்டு.!

பி.டி.உஷா அவர்களின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனையையும் படைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

தொடர் ஓட்டத்தில் தங்க பதக்கம்

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார் வித்யா ராம்ராஜ்.

இவரின் இந்த சாதனைக்கு கனிமொழி எம்பி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

42 ஆண்டுகால சாதனை முறியடிப்பு

அவர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பி.டி. உஷா அவர்களின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனையையும் படைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை மேலும் உயர்த்தி வரும் வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT