சென்னையில் பெற்றோர் கண்முன்னே இளைஞர் வெட்டி படுகொலை - கனிமொழி எம்.பி. கண்டனம்!

தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களின் விலையும், கொலையும்தான் அன்றாடம் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து கொண்டிருக்கின்றன.
சென்னையில் இளைஞர் படுகொலை - கனிமொழி கண்டனம்
Published on: 

இளைஞர் படுகொலை

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் தாயுடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அஜித் (28) என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் வந்த ஹரிஷ், ராஜேஷ் ஆகியோர் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியதாகவும், கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் இந்த சம்பவம் நடந்து உள்ளதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவத்தை தடுக்க சென்ற அவரின் தாயார் சரசு என்பவருக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

கண்டனம்

இக்கொலைச் சம்பவத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தள பதிவில் தெரிவித்துள்ளதாவது;

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் அஜித் என்ற இளைஞர், வீட்டு வாசலில் பெற்றோரின் கண்முன்பே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களின் விலையும், கொலையும்தான் அன்றாடம் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து கொண்டிருக்கின்றன.

முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சிக்க ஸ்கிரிப்டை-ஐ மனப்பாடம் செய்வதில் காட்டும் அக்கறையை, தன்வசமுள்ள காவல்துறையைச் செயல்படுத்துவதில் கொஞ்சம் காட்டியிருந்தால் கூட இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்திருக்கலாம். இனியாவது செய்வாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com