தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக நீடித்து வரும் நிலையில், எதிர்கட்சியினர் நாளை டெல்லியில் பேரணியை அறிவித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் (SIR) போது லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இரண்டு தேர்தல் அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இது பூதகரமாக வெடித்த நிலையில் மாணவர் அமைப்புகள் போராட்டத்தை கையிலெடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மறுபுறம் மும்பையில் சிஜேபி சார்பாக போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
இந்தநிலையில் நாளை தேர்தல் அதிகாரியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்கட்சிகள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையரின் இந்த நடவடிக்கைகு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள், குறிப்பாக ராகுல் காந்தி மற்றும் மம்தா பானஜி போன்றோர், தேர்தல் ஆணையம் வாக்குகளைத் திருடுவதாகக்கூறி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் எதிர்கட்சிகள் பேரணியை அறிவித்துள்ளனர்.
அதன்படி, நாளை காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தின் மகர் துவார் பகுதியில் இருந்து தேர்தல் ஆணைய தலைமையகம் வரை பேரணிதலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான நாளைய போராட்டத்தை இண்டியா கூட்டணி எம்பிக்கள் முன்னெடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதில் பங்கேற்கின்றனர்.
எதிர்க்கட்சிகளின் பேரணியை அடுத்து டெல்லி நாடாளுமன்ற வளாகம், ஆணைய அலுவலகம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .
டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ளன. போராட்டங்களைத் தவிர்க்கப் பாதுகாப்புக்காகப் பல ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.