ராகுல்காந்தி அக்டோபர் 3-ந்தேதி சென்னை வருகிறார் - மாணிக்கம் தாகூர் தகவல்

மாணவர்கள் கலந்து கொள்வதற்கான அனுமதி பெறுவதற்காக தனி கியூஆர் கோடு வெளியிடப்பட்டு உள்ளது.
Rahul Gandhi
Published on
Summary

அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அருகிலும் ராகுல்காந்தி வருகை மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடுவது பற்றிய தகவல்கள் விளம்பர பதாகைகளாக வைக்கப்படவுள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பிளஸ் 2 மாணவர்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இந்த கலந்துரையாடலின்போது ஏதாவது ஒரு தலைப்பில் அவர் உரையாற்றுவதோடு நீட் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாணவர்களின் கருத்துக்களையும் கேட்டு வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் அக்டோபர் 3-ந்தேதி அவர் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

ராகுல்காந்தியின் நிகழ்ச்சி நடைபெறும் தீவுத்திடலை தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர் ராஜேஷ் குமார் மற்றும் டெல்லியில் இருந்து வந்த மூத்த நிர்வாகிகள் நேரடியாக பார்வையிட்டனர்.

அக்டோபர் 3-ந்தேதி மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பிளஸ் 2 மாணவர்களிடம் இந்த தகவலை கொண்டு சேர்க்க விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அருகிலும் ராகுல்காந்தி வருகை மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடுவது பற்றிய தகவல்கள் விளம்பர பதாகைகளாக வைக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கான அனுமதி பெறுவதற்காக தனி கியூஆர் கோடு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கியூஆர் கோடை விருப்பமுள்ள மாணவர்கள் ஸ்கேன் செய்து அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதை தொடர்ந்து அனுமதி சீட்டு கிடைக்கும். இந்த அனுமதி சீட்டு வைத்து இருப்பவர்கள் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

நிகழ்ச்சிக்கு இன்னும் குறைவான நாட்களே இருப்பதால் மாணவர்களை திரட்டும் பணிகளில் காங்கிரசின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் இன்று முதல் ஈடுபடுவார்கள் என்றும் நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com