"மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் தான் நாட்டின் உண்மையான துரோகிகள்" - பிரகாஷ் ராஜ்

பாஜகவின் முகவராகச் செயல்பட்டு ஒரு பெரும் குற்றத்தைச் செய்துள்ளார்
பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்
Published on: 
Summary

எஸ்ஐஆர் விவகாரத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோரை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) செயல்முறை மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ், சிஜேபி உள்ளிட்ட எதிரணிகள் ஆளும் பாஜக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியுமாக டெல்லியில் "நோ எஸ்ஐஆர்" என்ற இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோரை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

பிரகாஷ் ராஜ் பேச்சு

"மற்றவர்களை 'அறிவுஜீவி நக்சலைட்டுகள்' என்று அவமதிப்பவர்கள், ஞானேஷ் குமார், மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர்தான் இந்த நாட்டின் உண்மையான துரோகிகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணையம் வாக்களிக்கும் உரிமையை மறுப்பதன் மூலம் ஜனநாயகத்தையும் நாட்டின் இறையாண்மையையும் அழிக்க முயற்சிக்கிறது.

முழுமையற்ற மற்றும் போலியான ஆவணங்களைக் காட்டி, லட்சக்கணக்கான மக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து சட்டவிரோதமாக நீக்கிய ஞானேஷ் குமார், பாஜகவின் முகவராகச் செயல்பட்டு ஒரு பெரும் குற்றத்தைச் செய்துள்ளார்

கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், படிவம்-7 மற்றும் அச்சிடப்பட்ட விண்ணப்பங்களைத் தவறாகப் பயன்படுத்தி, தலித், பழங்குடியினர், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினரின் வாக்குகளைப் பெருமளவில் பறிக்கும் திட்டமிட்ட முயற்சி நடைபெற்று வருகிறது.

'ஊடுருவல்காரர்களை' அகற்றுவதாகக் கூறி இந்த வாக்குப் பறிப்பு செய்யப்படுகிறது. இவை வெறும் தொழில்நுட்பத் திருத்தங்கள் அல்ல, சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, தேர்தல்களைச் சீர்குலைக்கும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை" என பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டினார்.

இவ்விவகாரம் தொடர்பாகத் தெளிவான ஆதாரங்களுடன் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதாகவும், போராட்டம் நடத்த வீதிகளில் இறங்கப் போவதாகவும் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

நோ எஸ்ஐஆர்

முக்கிய செயற்பாட்டாளர்களான நதீம் கான், அஜித் ஜா, நிகில் டே, விவசாயத் தலைவர் சரண் சிங் உள்ளிட்டோரும் இந்தச் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தற்போதைய எஸ்ஐஆர் திருத்தும் செயல்முறையை முழுமையாக ரத்து செய்தல், முந்தைய வாக்காளர் பட்டியலை மீட்டெடுத்தல், ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்தல், மற்றும் வரவிருக்கும் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் தேர்தல்களில் இந்தப் பட்டியலைப் பயன்படுத்துவதை தடுத்தல் போன்ற கோரிக்கைகளையும் 'நோ சர்' குழு முன்வைத்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com