search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fire accident"

    • தீ விபத்து ஏற்பட்டதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
    • விமானத்தில் 175 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

    பெங்களூரில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து டெல்லி விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது.

    விமானத்தில் ஏர் கண்டிஷனிங் யூனிட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, இன்று மாலை 6.40 மணியளவில் விமானம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது.

    ஏஐ 807 என்ற விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் 175 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

    இதைதொடர்ந்து, பயணிகளை பெங்களூரு செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக விமான நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

    • ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • மேல்மாடியில் இருந்த பணியாளர்கள் ஜன்னல்கள் வழியாக வெளியேற்றினர்.

    டெல்லி ஐடிஒ பகுதியில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலகத்தின் 4வது மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். 21 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்க வந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

    தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, கட்டடங்களில் மேல்மாடியில் இருந்த பணியாளர்கள் ஜன்னல்கள் வழியாக வெளியேறினர்.

    இருப்பினும், டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிப்புரிந்து வந்த ஒருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பட்டாசு ஆலையில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகளை கொள்ளையடிக்க மர்ம கும்பல் வந்தது தெரிய வந்தது.
    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    சிவகாசி:

    சிவகாசி அருகே செங்கமலபட்டியில் நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த 9-ந் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

    இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சட்ட விரோதமாக ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன், போர்மேன் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள உரிமையாளர் சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.

    விதிமுறைகளை மீறியதாக இந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்த பட்டாசு ஆலையை சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக வருவாய் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த பட்டாசு ஆலைக்கு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் லோடு ஆட்டோவில் வந்து செல்வதை கண்டு சந்தேகம் அடைந்த செங்கமலபட்டி கிராம மக்கள் பட்டாசு ஆலை இருக்கும் பகுதிக்கு திரண்டு சென்றனர். அப்போது பட்டாசு ஆலையில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பேன்சிரக பட்டாசுகளை கொள்ளையடிக்க மர்ம கும்பல் வந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொள்ளையர்களை விரட்டினர். இதனை கண்ட கொள்ளையர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்கள் லோடு ஆட்டோ ஆகிவற்றை விட்டுவிட்டு தப்பி சென்றனர். சம்பவ இடத்திற்கு சிவகாசி கிழக்கு போலீசார் விரைந்து வந்தனர்.

    கொள்ளையர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிள்கள், லோடு ஆட்டோவை போலீசாரிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனா். கிராம மக்கள் ஒப்படைத்த மோட்டார் சைக்கிளில் ஒரு மோட்டார் சைக்கிளில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த போலீஸ் வாகனத்தை விசாரித்து வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    பட்டாசு ஆலையில் கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை முயற்சி நடைபெற்ற செங்கமலபட்டி பட்டாசு ஆலையில் தற்போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பட்டாசு ஆலையில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோன் மற்றும் மர பர்னிச்சர் தயாரிக்கு கிடங்கில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    தீ விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்பும் ஏற்படவில்லை. அப்பகுதி முழுவதும் கரும்புகையாக சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.
    • காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

    பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    சிவகாசி அருகே நேற்று முன்தினம் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேரை பலியாகினர். படுகாயம் அடைந்த 14 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மேலும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 5வது முறையாக பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பட்டாசு ஆலையில் இருந்த 10 அறைகள் தரைமட்டமாகின.
    • மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று முன்தினம் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேரை பலியாகினர். படுகாயம் அடைந்த 13 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கு விதிமீறலே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆலையின் போர்மேன், குத்தகைதாரர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் பட்டாசு தொழிற்சாலையில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    பட்டாசு ஆலை விபத்தில் 13 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெடிபொருள் சட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • சிமெண்ட் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தனியார் சிமெண்ட் ஆலை தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், சிமெண்ட் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சிமெண்ட் ஆலையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளில் தீ பற்றியது. தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தால் ஆலையை சுற்றி பல கிலோ மீட்டர் தொலைவிற்கு கரும்புகை சூழ்ந்தது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டனர். தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனியார் சிமெண்ட் ஆலை தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
    • செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1,440 அடி உயரம் கொண்ட ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை உள்ளது.

    இந்த மலையின் உச்சியில் சிவன் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    இந்த மலை முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள், பல வகையான உயிரினங்கள் உள்ளன. தினந்தோறும் மூலிகைகளை பறித்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் மலை மீது தீ வைத்தனர். இதனால் மலையை சுற்றி காட்டுத்தீ மளமளவென எரிய தொடங்கியது. மலையில் இருந்த அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் மற்றும் உயிரினங்கள் தீயில் எரிந்து நாசமானது. சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் தீ எரிந்து கொண்டு இருந்ததால் புகை மூட்டம் காணப்பட்டது.

    இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தீயணைப்பு நிலைய மீட்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
    • தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் சீருடைகள், பழைய ரெக்கார்டு பதிவேடுகள் அனைத்தும் தீயில் கருகியது.

    தா.பேட்டை:

    திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தா.பேட்டை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதிவேடுகள், பள்ளி மாணவ, மாணவிகள் குறித்தான அனைத்து பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இந்த வட்டார கல்வி அலுவலகத்தின் அருகே காலியாக இருந்த இடத்தில் சருகுகள், காய்ந்த கட்டைகள் கிடந்தது. நள்ளிரவில் இதில் எதிர்பாராத விதமாக பட்ட நெருப்பு வட்டார கல்வி அலுவலகத்தின் உள்ளே பரவி உள்ளது.

    நள்ளிரவு முழுவதும் உள்ளே எரிந்த நிலையில் அதிகாலை அலுவலகத்தில் இருந்து புகை வருவதை அப்பகுதியினர் பார்த்து தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முசிறி தீயணைப்பு நிலைய மீட்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த ஆசிரியர்கள் அப்பகுதியினர் விரைந்து வந்து பீரோ கணினிகள் உள்ளிட்ட வைகளை உடனடியாக வெளியே கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் சீருடைகள், பழைய ரெக்கார்டு பதிவேடுகள் அனைத்தும் தீயில் கருகியது.

    • தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி.
    • படுகாயமடைந்தவர்கள் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    தெற்கு பிரேசிலில் உள்ள போர்டோ அலெக்ரே நகரில் பயன்பாடு இல்லாமல், வீடு இல்லாதோருக்கு முகாமாக செயல்பட்டு வந்த ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தீ விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கவும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து, மாநில ஆளுநர் எடுவார்டோ லைட், ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேயர் செபாஸ்டியாவோ மெலோ தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    • இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
    • ஓட்டலில் இன்னும் சிலர் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    பீகார் மாநிலம் பாட்னாவில் ரெயில்வே நிலையம் அருகே உள்ள மூன்று அடுக்கு மாடி ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், ஓட்டலில் இன்னும் சிலர் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஓட்டலின் உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
    • விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை வடபழனியில் உணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து விபத்துக்குள்ளானது.

    சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

    இந்த விபத்தில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    காலை நேரத்தில், பரபரப்பாக இயங்கிக்கும் கொண்டிருக்கும் வடபழனி பகுதியில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×