என் மலர்
- அண்ணன் - தம்பி பொங்கல் கனவு பலிக்கவில்லை
- 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்திற்காக பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில், ரூ.4 கோடியை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்னும் வழங்கவில்லை
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளப் படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.9 அன்றே வெளியாக இருந்தநிலையில், தணிக்கை பிரச்சனையால் தற்போதுவரை வெளியாகவில்லை. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறிமாறி விசாரணை தொடர்வதால் தற்போது வரை மாற்று ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவில்லை.
மறுபுறம் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் சொன்னவாறே ஜன.10 திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதற்கு முன்னதாக பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த சிவகார்த்திகேயன், "தொடக்கத்தில் பராசக்தி படத்தை தீபாவளி அல்லது அக்டோபரில் வெளியிடத்தான் திட்டமிடப்பட்டது. ஆனால், விஜய்யின் படமும் அதே நேரத்தில் வெளியாகும் என்று ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்தோம். இதனைத் தொடர்ந்து, ஜன நாயகன் வெளியீட்டை பொங்கல் திருநாளுக்கு மாற்றியிருப்பதாக அறிவிப்பு வெளியானது.
ஜன. 9-ல் ஜன நாயகனை கொண்டாடுங்கள். 33 ஆண்டுகளாக திரைத் துறையில் நம்மை மகிழ்வித்தவரின் கடைசிப் படம். அதற்கு அடுத்த நாளான ஜன.10-ல் பராசக்தியை கொண்டாடுங்கள். இந்தப் பொங்கல் -அண்ணன் தம்பி பொங்கல்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஜன நாயகன் குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிவகார்த்திகேயனை பெயர் குறிப்பிடாமல் தாக்கி பேசியுள்ளார். "ஜன நாயகன் வெளிவராதது மிகப்பெரிய வருத்தம். இந்த நேரத்தில் நாமும் சப்போர்ட்டாக இருந்து உதவி செய்திருக்கவேண்டும். மேடையில் அழுதுவிட்டு, எனக்கு அண்ணன்மாதிரி, தம்பிமாதிரி அப்டி இப்டினு அழுவிட்டு, பின்சென்று நடுரோட்டில் விட்டுவிடுவார்கள்." என பேசியுள்ளார்.
முன்னதாக 2019-ல் வெளியான 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்திற்காக பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில், ரூ.4 கோடியை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்னும் வழங்கவில்லை என்று சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும், அதற்கு ஞானவேல்ராஜா பதில் மனு தாக்கல் செய்ததும், இந்த வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.
- பைசன் படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.
இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். இந்நிலையில், சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd தளத்தில் இந்தாண்டிற்கான Top 10 Action / Adventure திரைப்பட தரவரிசைப் பட்டியலில் ஒரே தமிழ் படமாக 'பைசன் காளமாடன்' இடம்பெற்றுள்ளது
இந்த பட்டியலில் 7வது இடத்தை லோகா, 8வது இடத்தை துரந்தர் ஆகிய இந்திய படங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் இடத்தை டீகாப்ரியோ நடிப்பில் வெளியான 'One Battle After Another' படம் முதலிடம் பிடித்துள்ளது.
- அருண் பாண்டியன் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
- நிவாஸ் கே.பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மை டியர் சிஸ்டர். இவர்களுடன் அருண் பாண்டியன் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அக்கா-தம்பி பாசத்தை மையக்கருவாக கொண்டு படம் உருவாகி உள்ளது. 'என்னங்க சார் உங்க சட்டம்' புகழ் பிரபு ஜெயராம் இப்படத்தை இயக்கியுள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்டுமைன்ஸ் டெலிஃபிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில் படம் இந்தாண்டு கோடையில் வெளியாகும் என பொங்கலை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
- இதன் டிரெய்லரை விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார்.
ஒரே படத்தில் வெவ்வேறு கதைகள் இடம் பெறக் கூடிய 'ஆந்தாலஜி' வகைப் படங்களில் ஒன்று ஹாட்ஸ்பாட். கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருந்தார். அதனைத்தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் உருவாகி உள்ளது. 'ஹாட்ஸ்பாட் 2' மச் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. டிரெய்லரின் படி இரண்டாம் பாகமும், முதல் பாகத்தை போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் நடிகர்கள் பிரியா பவானி சங்கர், தம்பி ராமையா, ரக்ஷன், அஸ்வின் குமார், ஆதித்ய பாஸ்கர், எம்.எஸ்.பாஸ்கர், பவானி ஸ்ரீ, பிரிஜிடா சாகா மற்றும் சஞ்சனா திவாரி ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். படத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி படம் ஜன.23ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திரௌபதி 2 படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
- வரலாற்று புனைவாக இந்த படம் உருவாகி உள்ளது.
2016 ஆம் ஆண்டு வெளியான "பழைய வண்ணாரபேட்டை" படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி.
இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது.
கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் மோகன் ஜி அடுத்து இயக்கியுள்ள படம் திரௌபதி 2. இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரலாற்று புனைவாக இந்த படம் உருவாகி உள்ளது.
ஜன நாயகன் படம் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாகதாததால் திரௌபதி 2 படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திரௌபதி 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திரௌபதி 2 திரைப்படம் சுபாஷ் சந்திர போஸின் பிறந்ததினமான ஜனவரி 23 அன்று வெளியாகிறது. பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்ட எங்களின் முதல் படைப்பு திரௌபதி 2 திரைப்படம், திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.
எங்களின் இந்த முடிவை பெரியமனதுடன் ஏற்று எப்போதும் போல உங்களின் அன்பையும் ஆதரவையும் தருமாறு ரசிக பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
திரெளபதி 2 மிகப் பெரிய உழைப்பு. பலரின் கனவு. சரியான முறையில், அதிக திரையரங்குகளில் உங்களை சேர வேண்டும் என்ற ஒரே நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு.. 23 ம் தேதி இதே ஆதரவை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பொங்கல் அன்று வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை பகிர்ந்த மோகன் ஜி, "திரெளபதி2 மிகப் பெரிய உழைப்பு.. பலரின் கனவு. சரியான முறையில், அதிக திரையரங்குகளில் உங்களை சேர வேண்டும் என்ற ஒரே நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு.. 23ம் தேதி இதே ஆதரவை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.. பொங்கல் அன்று வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
- மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஜன.21-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. ஏற்கனவே இந்த வழக்கில் மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்தே 'ஜன நாயகன்' படம் தொடர்பான வழக்கு வரும் திங்ககிழமை (19.01.2026) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாள் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
- வித் லவ் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்
- டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார்
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். தற்போது வித் லவ் படம்மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் ஜீவிந்த்க்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர், முதல் பாடல் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மறந்து போச்சே பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
- 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படவில்லை
- இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரும் 19 ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்காததால் அறிவித்த தேதியில் படம் வெளியாகாமல் போனது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரும் 19 ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
இதனிடையே, 'ஜன நாயகன்' பட விவகாரத்தில் மத்திய அரசு விஜய்க்கு அரசியல் அழுத்தம் தருவதாக தி.மு.க.வும், தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜன நாயகன் சென்சார் விவகாரம் குறித்து நடிகர் விமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விமல், "இதெல்லாம் என்கிட்ட கேட்டா.. எனக்கு என்ன தெரியும். நான் பதில் சொல்ற மாதிரியான கேள்வியா கேளுங்க" என்று தெரிவித்தார்.
- இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.
விஜய் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் விரைவில் தமிழில் தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9 வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
எனவே தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த சூழலில் தயாரிப்பாளர் தாணு இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், "வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க , 'தெறி' படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்." என்று அறிவித்துள்ளார்.
ஜன நாயன் ரிலீஸ் தள்ளிபோனதால், கார்த்தியின் வா வாத்தியார், ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில், திரௌபதி 2 ஆகிய படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சிவகார்திகேயனின் பராசக்தி கடந்த ஜனவரி 9 முதல் திரையங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
- பிப்ரவரி 12, 1965 அன்று கோயம்புத்தூருக்கு இந்திரா காந்தி வருகை புரியவில்லை.
- முழுப் படமும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள 'பராசக்தி' படத்தை தடைசெய்ய வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அணி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில துணைத் தலைவர் அருண் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"1965-ல், அனைத்து மாநிலங்களிலும் அஞ்சல் அலுவலகப் படிவங்கள் இந்தியில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்று காங்கிரஸ் அரசாங்கம் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது எங்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்குடன் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான புனைவு ஆகும்.
திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சந்திப்பது போன்றும், அதில் இந்திரா காந்தி வில்லத்தனமாகப் பேசுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது முழுவதும் ஒரு கற்பனை சித்தரிப்பு காட்சி. மறைந்த தேசியத் தலைவர்களை அவர்கள் வரலாற்றில் இடம்பெறாத நிகழ்வுகளில் சம்பந்தப்படுத்திச் சித்தரிப்பது சட்டத்திற்குப் புறம்பானது.
இந்த சித்தரிப்பை மேலும் வலுப்படுத்தி திரைப்படத்தில் இந்திரா காந்தி பிப்ரவரி 12, 1965 அன்று கோயம்புத்தூருக்கு வருகை தந்ததாக காட்டப்பட்டுள்ளது. உண்மையில் அப்படி ஒரு வருகை நிகழவே இல்லை. பின்னர், அவர் முன்னிலையில் ஒரு ரயில் எரிக்கப்படுவது போன்ற காட்சிகளும், இந்தி திணிப்புக்கு எதிரான கையெழுத்துக்களை அவர் ஏற்றுக்கொண்டது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் எதுவும் வரலாற்றில் நடக்கவில்லை, இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அதுபோல திரைப்படத்தின் இறுதியில், நமது தலைவர்களான கே. காமராஜர், இந்திரா காந்தி மற்றும் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் உண்மையான புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. அதனுடன், பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி 200-க்கும் மேற்பட்ட தமிழ் மக்களைச் சுட்டுக் கொன்றது என்ற முற்றிலும் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு எந்தவித ஆதாரமும் இல்லாமல் முன்வைக்கப்பட்டு, நமது கட்சியையும், நமது தலைவர்களையும் தவறான மற்றும் அவதூறான தகவல்களின் மூலம் வேண்டுமென்றே கலங்கப்படுத்தும் காட்சி.
இது தவிர, காங்கிரஸ் கொடி எரிக்கப்படும் காட்சிகள் கூட படத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த முழுப் படமும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் நிகழாத நிகழ்வுகளைச் சித்தரிக்கும் பராசக்தி திரைப்படத்தின் அனைத்துக் காட்சிகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். திரைப்படத் தயாரிப்புக் குழு பொது மன்னிப்புக் கோர வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அநீதிக்கு எதிராகத் தங்கள் குரல்களை எழுப்புமாறு அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
#பராசக்தி திரைப்படத்தைத் தடை செய்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக நாளை வெளியாகிறது
- இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.
தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் பராசக்தி படம் ஜனவரி 10 ஆம்ட தேதி வெளியானது.
பொங்கல் வெளியீடாக பராசக்தி மட்டும் வெளியான நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மற்ற படங்களும் திடீரென்று பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.
கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக நாளை (ஜனவரி 14) வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், வா வாத்தியார் பட வெளியீட்டை ஒட்டி முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நடிகர்கள் கார்த்தி, சத்யராஜ், ஆனந்தராஜ் ஆகியோர் மரியாதையை செலுத்தினர். இது தொடர்பான புகைப்படங்களை கார்த்தி தந்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் EKO வெளியாகியுள்ளது.
- EKO படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
Eko' (எக்கோ) என்ற மலையாள மர்ம த்ரில்லர் திரைப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பிற மொழி ரசிகர்களையும் இப்படம் கவர்ந்துள்ளது.
சந்தீப் பிரதீப், வினீத், நரேன் போன்றோர் நடித்துள்ள இந்தப் படம், மர்மம் மற்றும் திகில் நிறைந்த ஒரு கதைக்களத்தைக் கொண்டது. குறிப்பாக கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டுகள் எதிர்பார்ப்பவர்களைக் கவரும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், EKO படத்தை பாராட்டி நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "EKO என்ற மலையாளப் படம் ஒரு மாஸ்டர் பீஸ். எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவர் நடிகை பியானா மோமின். அவர் தலைசிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்" என்று தெரிவித்தார்.








