

2026ஆம் ஆண்டு 5வது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் ஐச்சி மாகாணம் நகோயா நகரில் அக்டோபர் 18 தொடங்கி நடைப்பெற்று வருகிறது. வரும் அக். 24-ஆம் தேதி நிறைவடையும் இப்போட்டியில் 45 நாடுகளைச் சோ்ந்த 3,000 போ் பங்கேற்றுள்ளனா்.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளிலேயே இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளனர். பெண்களுக்கான 10 மீட்ரர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் பதக்கம் வென்ற மோனாஅகர்வால் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற அவானி லேகரா ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்து செய்தி குறித்து பிரதமர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2026-ல், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு வாழ்த்துகள். அவர் பெற்றுள்ள அபாரமான மதிப்பெண், புதிய ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி சாதனையாகவும் பதிவாகியுள்ளது.
இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்; இது இந்தியாவின் தொடக்க நாளை இன்னும் சிறப்பானதாக மாற்றியுள்ளது. 2026 பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு வாழ்த்துகள்! அவரது அசாத்தியமான ஸ்கோர், ஒரு புதிய ஆசிய பாரா விளையாட்டு சாதனையையும் படைத்துள்ளது. இந்தியாவின் தொடக்க நாளை மேலும் சிறப்பாக்கியுள்ள இந்த சாதனை உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
மேலும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 பிரிவில் சிறப்பான புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது நிலைத்தன்மையும் உறுதியும் தேசத்தைத் தொடர்ந்து பெருமைப்படுத்துகின்றன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்
என்று தெரிவித்துள்ளார்