

2026ஆம் ஆண்டு 5வது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் ஐச்சி மாகாணம் நகோயா நகரில் அக்டோபர் 18 தொடங்கி நடைப்பெற்று வருகிறது. வரும் அக். 24-ஆம் தேதி நிறைவடையும் இப்போட்டியில் 45 நாடுகளைச் சோ்ந்த 3,000 போ் பங்கேற்றுள்ளனா். கடந்த ஹாங்ஷூ ஆசிய பாரா போட்டியில் இந்தியா 29 தங்கம் உள்பட 111 பதக்கங்களுடன் 5-ஆம் இடத்தைப் பெற்றிருந்தது.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் பாரா துப்பாக்கிச் சுடும் வீராங்கனைகளான மோனா அகர்வால் மற்றும் அவானி லேகரா ஆகியோர் முதல் ஆட்டத்திலேயே இரட்டைப் பதக்கங்களை வென்றனர். இதில் மோனா தங்கப் பதக்கத்தையும், அவானி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். இந்த ஜோடியின் சிறப்பான செயல்பாடு, இப்போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கங்களைப் பெற்றுத் தந்தது.
ஏழாவது தொடரின் முடிவில் தங்கப் பதக்கம் வென்றபோது 250 புள்ளிகள் பெற்று, அகர்வால் புதிய ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கபதக்கம் வென்றரார், இந்த வெற்றியின் மூலம் , 2023 ஹாங்சோ விளையாட்டுப் போட்டிகளில் லேகரா 249.6 புள்ளிகளுடன் படைத்திருந்த முந்தைய சாதனையை அவர் முறியடித்தார்
இந்த இறுதிப் போட்டியில் தென் கொரியா மற்றும் கஜகஸ்தான் வீராங்கனைகளின் கடுமையான போட்டியை முறியடித்து அவனி லேகரா வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். முதல் நாளிலேயே இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி என 2 பதக்கங்களை அள்ளி ஆசிய பாரா தொடரில் ஒரு புதிய வரலாறை பதிவு செய்துள்ளனர்.