தமிழக சட்டசபை தேர்தல்- அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட வாய்ப்பு

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு ஆட்சிமன்ற குழு கூட்டமும் இன்று நடைபெறுகிறது.
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்
Published on

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வது, சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் அதிமுக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு ஆட்சிமன்ற குழு கூட்டமும் நடைபெறுகிறது.

இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக, நேற்று ஒரே நாளில் விருப்பமனு தாக்கல் செய்த 8 ஆயிரத்து 200 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com