அதிரடி காட்டிய மேக்ஸ்வெல்.. முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

முதல் டி20 போட்டி கப்பா மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
அதிரடி காட்டிய மேக்ஸ்வெல்.. முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
Published on

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

அதில், முதல் டி20 போட்டி கப்பா மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால இப்போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 7 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 43 ரன்களை குவித்தார்.

இதனையடுத்து, 94 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 7 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com