அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமமுக பொருளாளர் வெற்றிவேல்
அமமுக பொருளாளர் வெற்றிவேல்
Published on

சென்னை:

அ.ம.மு.க. கட்சியின் பொருளாளராக வெற்றிவேல் இருந்து வருகிறார். கட்சி பணியில் தீவிரமாக இருந்த அவருக்கு, கடந்த 6-ந்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அ.ம.மு.க. நிர்வாகி வெற்றிவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வெற்றிவேலின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com