முதலமைச்சர் விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது- நடிகர் சூரி

குழந்தைகள், இளைஞர்கள் முதல் அனைவரும் சட்டமன்றம் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள் இது மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயம்.
Actor Soori, Chief Minister Vijay
Published on
Summary

குழந்தைகள், இளைஞர்கள் முதல் அனைவரும் சட்டமன்றம் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள் இது மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயம். நடிகர் விஜய் இல்லாத சினிமா துறை என்பது அந்த இடம் ஒரு ஏமாற்றம் தான்.

கோவை விமான நிலையத்தில் நடிகர் சூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

மண்டாட்டி திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. இந்த திரைப்படம் மீனவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று நம்புகிறேன். ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பாய்மர படகு போட்டி பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டை உலகம் முழுவதும் சேர்க்கின்ற படமாக இந்த படம் இருக்கும்.

பாக்கியம்

மீனவர்கள் சார்ந்த பிரச்சினைகளும் படத்தில் உள்ளது. அதனை படத்தில் பார்த்தால் அனைவருக்கும் தெரியும். பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லாமல் ஒரு தேவையான படமாகவும் இது இருக்கும். மீனவராக நடித்தது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இதை ஒரு அனுபவம். ஒரு வாழ்க்கை படமாக நான் கருதுகிறேன்.

காமெடியனாக இருந்த என்னை மக்கள் ஒரு கதாநாயகனாக கொண்டு வந்து இருக்கிறார்கள். மக்கள் அங்கீகரித்தாலே யாராக இருந்தாலும் ஒரு துறையில் இருக்கலாம்.

சட்டசபை நிகழ்வுகள்

மக்களுக்கு தேவையான படங்களை கொடுப்பதற்கு நான் ஆசைப்படுகிறேன். காலை முதல் மாலை வரை சட்டசபையில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிகிறது.

ஆரோக்கியமானது

குழந்தைகள், இளைஞர்கள் முதல் அனைவரும் சட்டமன்றம் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள் இது மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயம். நடிகர் விஜய் இல்லாத சினிமா துறை என்பது அந்த இடம் ஒரு ஏமாற்றம் தான். அடுத்த திரைப்படம் அயலான் திரைப்படத்தை இயக்கிய இயக்குனருடன் நடிக்கப்போகிறேன். செப்டம்பர் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என நினைக்கிறேன். மீனவர்களில் ஒருவனாக நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம். மீனவர்களின் வலியை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். மீனவர்கள் எப்பொழுதும் நன்றாக இருக்க வேண்டும். மீனவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் அவர்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com