அகல்விளக்கு பதிப்பக மோசடி அம்பலம்: கன்னிமாரா நூலகத்தில் 523 போலி நூல்கள்- விசாரணைக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நூல்களில் பெரும்பாலானவை போலி, இல்லாத எழுத்தாளர்கள் பெயரில் ஊழல் செய்யப்பட்டுள்ளாதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
Minister Rajmohan
Published on: 
Summary

விஜய் பெயரில் போலி எழுத்தாளர்கள், இல்லாத பதிப்பகம் பெயரில் 523 புத்தகங்கள் கொள்முதல் - AI மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் என ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளனர்.

பெரியார் நூலக சர்ச்சை தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திமுக ஆட்சிக்காலத்தில் நூலகங்களுக்கான புத்தக கொள்முதலில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சென்னை கன்னிமாரா நூலகத்தில் நடந்த புத்தக கொள்முதல் மோசடி தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னிமாரா நூலகத்தில் மட்டும் அகல்விளக்கு பதிப்பகத்தின் பெயரில் 523 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட 500 நூல்களும் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இந்த புத்தகங்கள் அனைத்தும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோசடியில் இல்லாத எழுத்தாளர்களின் பெயரில் நூல்கள் தயாரிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டதுடன், ஏற்கனவே நூலகத்தில் இருந்த பழைய இருப்பை புதிய இருப்பு போல் கணக்கு காட்டியும் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அகல்விளக்கு மட்டுமல்லாமல் பீனிக்ஸ், சிக்மா போன்ற பெயர்களிலும் இன்னும் பல மோசடி பதிப்பகங்கள் செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நியாயமான முறையில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த புத்தக கொள்முதல் ஊழலின் முழு பின்னணியும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X