தமிழக அரசு தனியாரிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை சராசரியாக ₹35 என்ற மிக அதிக விலைக்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான ஊழல் மற்றும் நிர்வாகக் குளறுபடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன
குறைந்த விலையில் மின்சாரம் வழங்க ஒப்புக்கொண்ட முந்தைய நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, தற்போதைய அவசர கால குறுகிய கால ஒப்பந்தங்களை அதிக விலைக்கு வாங்குவதற்கான தேவை எனன் இருக்கிறது என்று அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.
தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தேமுதிக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
இது குறித்து தேமுதிக தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
கடந்த காலங்களில் ஒரு யூனிட் மின்சனந்தை ரூ.13-க்கு கொள்முதன் செய்த நிலையில், மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தைத் தனியாரிடம் இருந்து ரூ.35-க்கு கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? தமிழ்நாடு எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்ற கேள்வியை இன்று மக்கள் எழுப்பி வருகின்றனர்.
ஒருபுறம் மின்வெட்டு, மறுபுறம் மின்கட்டண உயர்வு என மக்கள் பல்வேறு சிரமங்கலைச் சந்தித்து வரும் நிலையில், தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மிஞ்சயத்தை ரூ.35 என்ற அதிக விலைக்கு வாங்குவது எந்த வகையில் நியாயமானது? இதற்குத் தமிழக அரசு உரிய விலக்கம் அளிக்க வேண்டும்.
ஏற்கனவே மின்சாரத் துறை கடன் சுமையில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு சுமார் ரூ.10 லட்சம் கோடி கடனில் இருப்பதாகக் கூறப்படும் சூழலில், தனியாரிடம் தொடர்ந்து அதிக விலை கொடுத்து மின்சனம் வாங்குவதன் மூலம் மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்துவது எதற்காக?
இந்தக் கொள்முதல் நடவடிக்கையின் அவசியம், விலை நிர்ணயம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கன புதிய திட்டங்களாய உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். மின் உற்பத்தித் திட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து, வின்கட்டணத்தை உயர்த்துவதும், மின்வெட்டுக்கு வழிவகுப்பதும், தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதும் மக்களின் சுமையை மேலும் அதிகரிக்கும். மக்களின் வரிப்பணத்தையும், மாநிலத்தின் நிதிநிலையையும் கருத்தில் கொண்டு, மின்சார உற்பத்தியைப் பெருக்கி, நியாயமான விலையில் தடையற்ற மின்சாரம் வழங்குவதே அரசின் கடமையாகும்.
என்று குறிப்பிட்டுள்ளார்.