கேப்டன் நலமுடன் இருக்கிறார்.. வீடியோ வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்தின் உடல்நிலை 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லை. அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.
கேப்டன் நலமுடன் இருக்கிறார்.. வீடியோ வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்
Published on

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18-ம் தேதி முதல் ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று (நவம்ர் 29) மட்டுமே இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அதில் கடைசியாக வெளியான அறிக்கையில், "தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது," என குறிப்பிடப்பட்டு இருந்தது.

கேப்டன் விஜயகாந்துக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக அறிக்கை வெளியானது முதல், திரைத்துறை பிரபலங்கள் துவங்கி அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பலத்தரப்பினரும் விஜயகாந்த் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டி கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் நலமாக இருக்கிறார் என்றும் விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, அனைவரையும் சந்திப்பார் என்றும் தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com