பதிலற்ற பதிலுரை- உதயநிதி விமர்சனம்

எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better! என்று கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Published on
Summary

அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சட்டசபையில் அமளி

தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிகை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சரின் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, தி.மு.க.உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

dummy CM

அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?

பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.

எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better! என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com