

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் இல்லத்திருமண விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி, கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின் முதலில் கே.என்.நேருவை புகழ்ந்து பேசினார். பின்னர் தவெக ஆட்சிக் குறித்து விமர்சித்த பேசிய அவர்.,
விரைவில் திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் வரப்போகிறது.
ஆறு மாத காலமாக தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மன்னிக்கவும், ஆட்சி என்று சொல்லக்கூடாது; அது ஒரு காட்சியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அது சும்மா வெத்து வேட்டாகத்தான், ஒரு சீன் காட்டிக் கொண்டிருப்பதைபோல, ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
‘மாற்றம், மாற்றம்’ என்று சொன்னார்கள். அது தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்த அளவில், மிகப்பெரிய ஏமாற்றம்தான் உருவாகி இருக்கிறது. திரையில் கதாநாயகனாக நடித்து, நிஜத்தில் ஒரு வில்லனாக உலா வந்து கொண்டிருப்பவர்தான், இன்றைக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார்.
எங்கு பார்த்தாலும், பாலியல் கொடுமைகள், வன்கொடுமைகள்தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அந்த வன்கொடுமைகளுக்கு ஆளாகக்கூடியவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட மக்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
அந்தப் பாலியல் கொடுமைகளுக்கு எல்லாம் காரணமாக இருப்பவர்கள் யார் என்பதைப் பற்றியும் உங்களுக்குத் தெரியும். அதில் பெரும்பாலும் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள்தான் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில்கூட, நீங்கள் செய்தியில் பார்த்திருக்கலாம். காரமடைப் பகுதியில் ஒன்றியச் செயலாளர் தலைமறைவாகி இருக்கிறார். இன்றைக்கு இருக்கும் த.வெ.க. கட்சியின் பெயரை மாற்றிகூட, அவர்களுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னால், ‘பாலியல் சுரண்டல் கழகம்’ என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என்ற சூல்நிலைகூட உருவாகும்.
‘தூய சக்தி, தூய சக்தி’ என்று சொல்லி, இன்றைக்கு ஒரு கொடுமையான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.
ஒரு மனு கொடுக்க வந்த தோழரையே, மக்கள் பிரதிநிதியையே, துணை சபாநாயகர் தாக்கி இருக்கிறார் என்ற வீடியோ காட்சிகள் எல்லாம் பார்த்தீர்கள்.
அதுமட்டுமல்ல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆட்சித் தலைவருக்கே என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், இங்கு அமர்ந்திருக்கும் நம்முடைய கனிமொழிதான் அந்தச் செய்தியை முதன்முதலில் வெளிப்படுத்தி, மக்களிடத்தில் எடுத்துச் சொன்னார். அதற்குப் பிறகுதான், அது தெரிய வந்தது.
அதைப்பற்றிகூட கேட்டால், முதலமைச்சர் வாய் திறக்க மறுக்கிறார். ஆனால் சட்டத்துறை அமைச்சர் என்ன சொல்கிறார், “அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை” என்று சொல்கிறார்.
ஆனால் இன்னும் சில அமைச்சர்கள் என்ன சொல்கிறார்கள், “புகார் முறையாக கொடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சொல்கிறார்கள். இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் முடிவு கட்ட, விரைவில் ஒரு நல்ல சூழ்நிலை அமைய இருக்கிறது. அதற்கு நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு, இங்கே மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள், எல்லா வகையிலும் சிறப்புகளைப் பெற வேண்டும்.
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்” இருந்து, வாழுங்கள்... பாடுபடுங்கள்... பணியற்றுங்கள் என்று கேட்டு, ‘வாழ்க மணமக்கள், வாழ்க மணமக்கள்’ என்று சொல்லி, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!” எனப் பேசி முடித்தார்.