Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 17 அக்டோபர் 2026

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 17 அக்டோபர் 2026

‘ஏசி’ காத்திருப்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தமிழகத்தில் 25 நவீன பத்திரப்பதிவு மையங்கள்

* மையங்களை வடிவமைத்து பராமரிக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தக் காலம் 5 ஆண்டுகள்.

* வரவேற்பைப் பொருத்து அடுத்தக்கட்டமாக மேலும் 20 மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.

ஜாபர் சாதிக் வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பரவியது- அமைச்சர் நிர்மல் குமார்

* திமுக ஆட்சியே தமிழகத்தில் போதைப்பொருள் பரவக் காரணம்.

* அதிமுக சொத்துக்களை திமுகவிடம் அடகுவைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார்.

உலக மல்யுத்தம்: இந்திய வீராங்கனை அம்ருதா இறுதிப்போட்டிக்கு தகுதி

* பெண்களுக்கான பிரீஸ்டைல் 72 கிலோ எடைப்பிரிவில் அம்ருதா பூஜாரி கால் இறுதியில் வென்றார்.

* இந்திய வீராங்கனை கோமல் 7-2 என்ற புள்ளி கணக்கில் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.

கிரீஸ் நாட்டில் திருமண ஏற்பாடு.. காவ்யா மாறனை கரம் பிடிக்கிறார் அனிருத்

* நவம்பர் 11-ந்தேதி அனிருத்-காவ்யா மாறன் திருமணம் நடைபெறுகிறது.

* திருமணத்திற்காக 4 தனி விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

* வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

* சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரம்: பெரியாறு, வைகை அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

* மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 27.40 அடியாக உள்ளது. 9 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

* மழை, பேரிடர் தொடர்பான புகார்களை 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

GOLD PRICE TODAY : வார இறுதிநாளில் சற்று உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்

* வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை.

* ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2.40 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party- மு.க.ஸ்டாலின்

* சொந்தக் கட்சியிலேயே மிகப்பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?

* ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com