

நாகை தவெக நிர்வாகியாக இருந்நத பூபாலன் வீட்டில் ரூ.270 கோடி மதிப்பு மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வருவதற்கு கடந்த திமுக அரசு தான் காரணம்.
ஜாபர் சாதிக் என்ற நபர் வந்த பிறகுதான் மெத்தபெட்டமைன் தமிழ்நாட்டில் இவ்வளவு வந்தது.
போதைப்பொருள் விவகாரத்தில் யாராக இருந்தாலும் எந்த கட்சியினராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக ஆட்சியாக இருந்தால் அது மெத்தபெட்டமைனே இல்லை, கோலப்பொடி என கூறி முடித்திருப்பார்கள்.
திமுக ஆட்சியில் ராமநாதபுரத்தில் போதைப்பொருள் கிடைத்தபோது அது உரம் என்று கூறி மறைத்தார்கள்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. அதிமுகவினர் என்னசெய்தென்று தெரியாமல் தவிப்பில் உள்ளனர்.
அதிமுக சொத்துக்களை திமுகவிடம் அடகுவைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார்.
முதலமைச்சராக விஜயை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியின் முடிவை அதிமுக தலைமை கழகத்தில் உள்ள ஒரு செங்கல் கூட ஏற்றுக்கொள்ளாது.
அவர்,மேற்குவங்கம், ஆந்திரா மாநிலங்களிலும் யூனிட் மின்சாரத்தை ரூ.30 வரை வாங்குகின்றனர்.
யார் திறந்து வைத்தாலும் திட்டத்தை உருவாக்குவது திமுக தான் என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பதிவிட்ட நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த கோவை பெரியார் அறிவுலகம் அரசு பணத்தில் கட்டப்பட்டது.
கோவை பெரியார் அறிவுலகம் திமுகவினருடைய திட்டம் கிடையாது, அரசு பணத்தில் கட்டப்பட்டது என்றார்.