

வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து 1,10,720-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,840-க்கும் விற்பனையானது. மாலையில் மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,760க்கும், கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.13,720க்கும் விற்பனையானது.
13-ந்தேதி சவரனுக்கு ரூ.280 குறைந்து 1,09,480-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,685-க்கும் விற்பனையானது. 14-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து 1,08,720-க்கும், கிராமுக்கு ரூ.95 குறைந்து ஒரு கிராம் ரூ.13,590-க்கும் விற்பனையானது. நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.600 குறைந்து 1,08,120-க்கும், கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.13,515-க்கும் விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 13,535ரூபாய்க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2.40 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
16-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,120
15-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,120
14-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,720
13-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,480
12-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,760
16-10-2026- ஒரு கிராம் ரூ.240
15-10-2026- ஒரு கிராம் ரூ.240
14-10-2026- ஒரு கிராம் ரூ.245
13-10-2026- ஒரு கிராம் ரூ.245
12-10-2026- ஒரு கிராம் ரூ.245