தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
TN Rain
Published on: 

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த ஆண்டு ‘எல்நினோ’ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்யவில்லை. இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று முழுமையாக விலகியது.

இதனால் தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிககனமழைக்கு வாய்ப்புள்ளது.

25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இதேபோல், சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு, நெல்லை, குமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறையில் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.

ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை கனமழை

கோவை, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com