Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 11 செப். 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live news

புதிதாக 30.. ஆகமொத்தம் 190 அணு ஆயுதங்கள் இந்தியா வசம் உள்ளது - வெளியான அறிக்கை

*140 முதல் 225 அணுஆயுதங்களை தயாரிப்பதற்குத் தேவையான புளுட்டோனியம் உள்ளது

*மேலும் 2 புதிய ஏவுதல் அமைப்புகள் இறுதிக்கட்ட உருவாக்கத்தில் உள்ளன

GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

* தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

BRICS: ஒன்றுகூடும் தலைவர்கள்.. உலக நலனை முன்னிறுத்தி விவாதிப்போம் - பிரதமர் மோடி

*மாநாட்டில் ஈரான் போர் விவகாரம், அதன் பொருளாதார தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ரஷிய அதிபர் புதின் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

சீனாவில் சோகம்.. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

*5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* கிங்டாவோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்தியா, திபெத், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் பதிவு

*அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.

*அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.

நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

* அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருகிறது

* வேறு வழியின்றி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு

* வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாகி விடுகிறது. 

* சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்து உள்ளது.

தியாகி இமானுவேல் சேகரனாரின் போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் - கனிமொழி

* விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று.

* இமானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com