சீனாவில் சோகம்.. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனா
சீனா
Published on
Summary

சீனாவில் துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

லைபீரியக் கொடியுடன் பயணிக்கும் 'ஓஷன் மெலடி' என்ற சரக்குக் கப்பல், பராமரிப்புப் பணிகளுக்காக கிங்டாவோ துறைமுகத்தில் சீனாவின் முக்கியக் கப்பல் போக்குவரத்து மையமான கிங்டாவோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தீ விபத்து

இந்நிலையில் நேற்று துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த கப்பலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்ட சமயத்தில் கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்துள்ளனர்.

மீட்பு பணியின்போது கப்பலுக்குள்ளிருந்து 25 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன அரசு ஊடகமான Xinhua உயிரிழப்புகளை உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பராமரிப்புப் பணிகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தீப்பற்றியதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்துச் சீனத் துறைமுக அதிகாரிகளும் தீயணைப்பு துறையினரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com