Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 10 அக்டோபர் 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live News

149 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை: சாதனை படைத்த ஆஸ்திரேலிய அணி...

*தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அனுபவமிக்க வீரர்களுக்கு மட்டுமே அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

*ஆஸ்திரேலிய டெஸ்ட் வரலாற்றில் 149 ஆண்டுகளில் பிளேயிங் லெவனில் 20 வயதுடைய ஒரு வீரர்கூட இடம்பெறாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும்.

எங்கள் எதிர்காலத்தை நாங்கள் தான் தீர்மானிப்போம், நீங்கள் தீர்மானிக்க முடியாது: எலான் மஸ்க்குக்கு கமல்ஹாசன் பதிலடி...

* இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் இணைய சேவையை தொடங்குவதற்கு தொழிபதிபர் அம்பானி தடுத்து வருவதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

* இந்த நிலையில், எவரும் ஒரு நாட்டின் கொள்கையை தீர்மானிக்க கூடாது என நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நியாயமான தேர்தல் நடைபெறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை - அபிஜீத் தீப்கே...

* டெல்லியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பெருமளவிலான இளைஞர்கள் கலந்துகொள்ள வேண்டும் என அபிஜீத் தீப்கே தெரிவித்திருந்தார்.

* இதையடுத்து டெல்லிக்கு செல்லும் பல ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 600 பேர் கைது: ஜந்தர் மந்தரில் உச்சகட்ட பாதுகாப்பு...

* தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

* இந்த நிலையில் காவல்துறையின் அனுமதியை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

* துரைமுருகன் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* துரைமுருகனுக்கு இதயநோய் பிரச்சனை இருப்பதாக சொல்லப்படுகிறது.

சென்னை வரும் ராகுல் காந்தி இன்று முதலமைச்சர் விஜயை சந்திக்கிறார்

* ராகுல்காந்தி கலந்து கொள்ளும் மாணவர்கள் நிகழ்ச்சிக்காக பிரமாண்ட பந்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com