சென்னை வரும் ராகுல் காந்தி இன்று முதலமைச்சர் விஜயை சந்திக்கிறார்

ராகுல்காந்தி இன்று சென்னையில் உள்ள தீவுத்திடலில் மாணவர்கள் முன்னிலையில் பேச இருக்கிறார்.
CM Vijay - Rahul Gandhi
Published on: 
Summary

10 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வருகை தரும் ராகுல்காந்தி முதலமைச்சர் விஜய்யை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசுகிறார்.

'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சி

இந்திய கல்வி முறையில் நடைபெறும் முறைகேடுகள், நீட் உள்ளிட்ட தேர்வுத் தாள் கசிவுகள், கல்விக் கட்டண உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை திரட்டி நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 'மாணவர்களின் குரல்' என்ற நிகழ்ச்சி வாயிலாக அவர்களிடம் பேசி வருகிறார்.

ராகுல் காந்தி

அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தொடங்கி, மகாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் நாசிக் நகரங்கள், மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூர் போன்ற இடங்களில் 'மாணவர்கள் குரல்' நிகழ்ச்சி நடத்திய ராகுல்காந்தி, இன்று சென்னையில் உள்ள தீவுத்திடலில் மாணவர்கள் முன்னிலையில் பேச இருக்கிறார்.

மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகை தரும் ராகுல்காந்தி, முதலமைச்சர் விஜய்யை அவரது நீலாங்கரையில் இல்லத்தில் மதியம் 1.30 மணிக்கு சந்திக்கிறார்.

சென்னை தீவுத்திடல்

பின்னர், சென்னை தீவுத் திடலில் நாளை மாலை 5 மணியளவில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்காக தமிழ்நாடு முழுவதும் இணையதளம் மற்றும் கியூ.ஆர். கோடு மூலம் நடத்தப்பட்ட மாணவர்கள் பதிவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 10 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

அகண்ட திரைகள்

ராகுல்காந்தி கலந்து கொள்ளும் மாணவர்கள் நிகழ்ச்சிக்காக பிரமாண்ட பந்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பந்தலுக்கு வெளியேயும் ஏராளமானோர் நின்று கொண்டு ராகுல்காந்தி நிகழ்ச்சியை பார்ப்பதற்காக அகண்ட திரைகள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர். மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் ராகுல்காந்தி தாஜ் கன்னிமாரா ஓட்டலில் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்திக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com