தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 'குரூப் 1' முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 27 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை லட்சகணக்கான தேர்வர்கள் எதிர்கொண்டனர்.
காலியாக உள்ள துணை ஆட்சியர், வணிக வரி உதவி ஆணையர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட மிக முக்கிய பதவிகளுக்கான 46 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்வு முடிந்து ஒரு வாரம் கடந்த நிலையில், தேர்விற்கான உத்தேச விடைக் குறிப்புப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது .
தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in -க்குச் சென்று விடைக் குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவுத்தப்பட்டுள்ளது
வெளியாகி இருக்கும் இந்த உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் / கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www.tnpsc.gov.in தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைகள் குறித்த ஆட்சேபனைகளை தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 13ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.