இணைய வழியில் ஆண்டிற்கு 2 கோடி குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர்- புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

40 லட்சம் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களின் சம்மதமின்றி இணையத்தில் பிறரால் பகிரப்பட்டுப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இணைய வழியில் பாலியல் கொடுமை
Published on
Summary

உலகளவில் பார்க்கும் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளைத் தாண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் இணையத்தைப் பயன்படுத்தும் 12 முதல் 17 வயதுடைய சிறுவர்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் ஆண்டிற்குப் பலமுறை இணையவழிப் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குழந்தைகள் பாதிப்பு

21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ஓராண்டில் மட்டும் சுமார் 2 கோடி குழந்தைகள் சமூக ஊடக தளங்கள் மற்றும் இணைய வழியில் பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களையும் கொடுமைகளையும் சந்திக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் தரவுகளின்படி, தோராயமாக 1.5 கோடி குழந்தைகள் அவர்களின் விருப்பமின்றி இணையத்தில் பாலியல் ரீதியான ஆபாச உள்ளடக்கங்களை பார்க்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 90 லட்சம் குழந்தைகள் பாலியல் உரையாடல்களில் ஈடுபடவும், தங்களது ஆபாச படங்களைப் பகிரவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, 40 லட்சம் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களின் சம்மதமின்றி இணையத்தில் பிறரால் பகிரப்பட்டுப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

உலகளவில் பார்க்கும் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளைத் தாண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இணையவழிப் பாலியல் குற்றங்களைத் தடுக்கவும் டிஜிட்டல் தளங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களை கவரும் வகையில் இணைய வழி குற்றவாளிகள் சமூக ஊடகங்கள் மற்றும் கேமிங் தளங்களைப் பயன்படுத்தி அவர்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துவது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com