துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்.. திருமாவளவன் வாழ்த்து

தமிழக அமைச்சரவையில் நான்கு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்.. திருமாவளவன் வாழ்த்து
Published on: 

தமிழக அமைச்சரவையில் நேற்றிரவு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டு இருக்கிறது. இவர் உள்பட நான்கு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.

இதோடு ஆறு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், துணை முதல்வரக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், "துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், புதிதாகப் பதவியேற்கவுள்ள அமைச்சர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்," என குறிப்பிட்டுள்ளார்.

X