செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் அரசு திணறிக்கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது - உதயநிதி

இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது.
Udhaynithi stalin
Published on: 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆறு வயது சிறுமி காணமல் போன வழக்கில் பத்து நாட்களுக்கு மேலாகியும் சிறுமியை கண்டுபிடிக்க இயலவில்லை .

கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் காவல்துறை சிறுமியை தேடி வருகிறது.சிறுமியைத் தேடும் பணியின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட கிராமம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் இதர நீர்நிலைகள், மலைப் பகுதிகள், பாறைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் தேடுதல் பணி நடந்து வருகிறது எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றோடு 11 நாட்கள் ஆகியும், அச்சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் இந்த அரசு திணறிக்கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது என எதிர்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

குழந்தையைக் கண்டுபிடிக்காத அரசையும் காவல்துறையையும் கண்டித்து தி.மு.கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தரணிவேந்தன் தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இராணிப்பேட்டையில் கூட இதே போல ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது.

முதலமைச்சர் தன் Reels மோகத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பிள்ளையை தொலைத்துத் தவிக்கும் அந்தக்குடும்பத்தின் வலியை உணர்ந்து, காணாமல் போன குழந்தையை உடனே கண்டறிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com