ஆசிய பாரா போட்டிகள்: தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாட்டு பாரா விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Published on: 
Summary

ஆசிய பாரா விளையாட்டில் வெற்றி பெற்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மாற்றுத்திறனாளி வீரர்களின் சாதனைகளுக்கு ஊக்கமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஜப்பானில் நடைபெற்று வரும் 5th Asian Para Games-ல் பேட்மிண்டன் விளையாட்டில் Mixed Doubles SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அதில் இடம்பெற்ற தமிழ்நாட்டு வீராங்கனை தங்கை மனிஷா ராமதாசுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு பதக்கங்கள்

தமிழ்நாட்டு பாரா விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினோம்.

அதன் விளைவாகவும் - தங்களின் விடாமுயற்சியாலும் திறமையாலும் தங்கை மனிஷா, தம்பி சிவராஜன் சோலைமலை, தங்கை கஸ்தூரி ராஜாமணி, தம்பி ஜெயான் டொரப் மதன், தங்கை சஹானா ரவி போன்ற நம் மாற்றுத்திறன் வீரர்கள் Asian Para Games இந்தியாவுக்காக பல்வேறு பதக்கங்களைக் குவித்துள்ளனர்.

மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் சாதனைகளைச் செய்து வரும் மாற்றுத்திறனாளி வீரர்களின் வெற்றி தொடரட்டும். அன்பும், வாழ்த்தும் என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com