

சென்னை நீலாங்கரையில் கே.என் நேருவின் சகோதரர் இல்லத்திருமண விழாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றிக் காட்டியவர் கே.என்.நேரு.
நேரு என்றாலே மாநாடு, மாநாடு என்றால் நேரு... அவர் உழைப்பிற்கு அடையாளமாக பலவற்றை எடுத்து சொல்லலாம்.
நேரு கோபக்காரர் என்பார்கள். ஆம் அவர் கோபக்காரர் தான், ஆனால் அந்த கோபத்தில் ஒரு குணம் இருக்கும். அன்பு இருக்கும்.
கே.என்.நேரு அமைச்சராக இல்லை என்றாலும் திருச்சி மாவட்டத்தில் இன்றும் அவர் அமைச்சராகத்தான் இருக்கிறார்.
இப்போது மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, விரைவில் திமுகவின் ஆட்சி தமிழ்நாட்டில் அமையும்.
இப்போதும் நான்தான் முதலமைச்சர் எனக்கூறாதீர்கள். வெட்கமாக இருக்கிறது. ஏனென்றால் நடப்பது மோசமான ஆட்சி.
தவெக தலைமையிலான மோசமான ஆட்சியின் காரணமாக விரைவில் திமுக ஆட்சி அமையத் தான் போகிறது.
திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் வரப்போகிறது. தமிழ்நாட்டில் 6 மாதமாக ஆட்சி நடக்கவில்லை.. காட்சி தான் நடக்கிறது.
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தான் நடக்கின்றன. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.