அதிமுகவில் இருந்து நீக்கம்- எடப்பாடி பழனிசாமிக்கு ஏ.வி.ராஜூ நோட்டீஸ்

தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.அதிமுக உட்கட்சி விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் நடவடிக்கை.
அதிமுகவில் இருந்து நீக்கம்- எடப்பாடி பழனிசாமிக்கு ஏ.வி.ராஜூ நோட்டீஸ்
Published on

சமீபத்தில் கூவத்தூர் விவகாரம் குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.வி.ராஜூவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில்,"தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். நீக்கம் தொடர்பான அறிவிப்பை திரும்ப பெறவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக உட்கட்சி விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் நேரடியாக நீக்கியது தவறு.

தன்னை நீக்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கட்சி விரோத நடவடிக்கை என்ன என்று விளக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com