தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் இன்று பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
வானிலை ஆய்வு மையம்
Published on: 
Summary

இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

குமரி கடலில் இருந்து உள் தமிழகத்தின் வழியாக ராயல சீமா வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இது தவிர தெற்கு கேரளம் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் குட்டம், வேலூர் ராஜதோப்பு, செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பெய்து உள்ளது.

X