சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on: 
Summary

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை உள்பட தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 26-ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

வானிலை ஆய்வு மையம்

இதுதவிர வருகிற 23-ஆம் தேதி வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு முழுக்க விட்டு விட்டு கனமழை பெய்தது. மேலும், கனமழை தொடர்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பள்ளிகள் விடுமுறை

இந்த நிலையில், கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com