விடிய விடிய கனமழை: சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
விடிய விடிய கனமழை: சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Published on: 
Summary

சென்னையில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்ததை ஒட்டி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி மேலும் நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 26-ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இதுதவிர வருகிற 23-ஆம் தேதி வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு முழுக்க விட்டு விட்டு கனமழை பெய்தது. மேலும், கனமழை தொடர்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை

இந்த நிலையில், கனமழை காரணமாக ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக். 21) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com