தமிழ்நாட்டுப் பெண்களின் 'Wake Up Call'-க்கு அரசு செவிசாய்க்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on: 
Summary

தமிழ்நாட்டுப் பெண்கள் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மு.க.ஸ்டாலின், அரசின் கவனம் ஆட்சி நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தி, பெண்களின் 'Wake Up Call'-க்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்நாடெங்கும் இன்று தி.மு.க. மகளிர் அணியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

செவிசாய்ப்பது அரசின் கடமை

தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.

போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம் தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் Show காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர்.

அவர்களின் #WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை! என்று கூறியுள்ளார்.

X