முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்

10-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்
Published on: 
Summary

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, மு.க.ஸ்டாலின் மதுரையில் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். மேலும், முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்வதற்காக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று இரவு ஒரே விமானத்தில் மதுரை வந்தார்.

மதுரை விமான நிலையத்திற்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின்னர் சிந்தாமணியில் உள்ள ஒரு ஓட்டலில் மு.க.ஸ்டாலின் தங்கினார்.

மரியாதை

இதனை தொடர்ந்து, இன்று காலை முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜையை ஒட்டி மதுரையில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

10-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

முன்னதாக, திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் மற்றும் அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகி வழக்கறிஞர் ரமேஷ் உட்பட 10-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

X