தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மதுராந்தகத்தில் 3-ந்தேதி மு.க.ஸ்டாலின் பிரசாரம்

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தவைர்கள் மதுராந்தகத்தில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on
Summary

மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 3-ந்தேதி பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளார். அன்றைய தினம் அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

5 முனைப்போட்டி

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது.

இதனால் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர்களின் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. ஒவ்வொரு கட்சி பிரமுகர்களும் மதுராந்தகத்தில் முகாமிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் தா. மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் இருவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தவைர்கள் மதுராந்தகத்தில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் நிர்வாகிகள் கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.பாரதி

அங்கு இன்று மாலை தி.மு.க. வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

தேர்தல் விதிமீறல்கள் நடைபெற்றால் அதனை எதிர்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்க உள்ளனர். இதற்காக அங்கு வார் ரூம் திறக்கப்பட உள்ளது.

மு.க.ஸ்டாலின்

மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 3-ந்தேதி பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளார். அன்றைய தினம் அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

கனிமொழி எம்.பி. வருகிற 29-ந்தேதி பிரசாரம் செய்கிறார். இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அங்கு நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசி உள்ளார். அவரது பிரசார சுற்றுப்பயணமும் தயாராகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com