சட்டமன்றம்... பட்டிமன்றம்... ராஜ்மோகன் Vs உதயநிதி- சட்டசபையில் நடந்த காரசார விவாதம்

மெரினாவுக்கு எப்படி பூட்டு போடுவது என சொல்லிக்கொடுத்தது முந்தைய தி.மு.க. அரசு தான். கடந்த 5 ஆண்டுகளாக மெரினாவுக்கு பூட்டு போடுவதில் PHD செய்தவர்கள் தி.மு.க. தான்.
ராஜ்மோகன்- உதயநிதி ஸ்டாலின்
ராஜ்மோகன்- உதயநிதி ஸ்டாலின்
Published on
Summary

உண்மையில் நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத் தெரியும் என்று உதயநிதி கூறியது தான் மிகப்பெரிய காதுகுத்து என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய நிகழ்வில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திட்டங்களுக்கு கட்டுபாடு விதிக்கும் அரசு தாய் மாமன் காது குத்தும் திட்டம் என மொத்தமாக பெயரிடலாம் என கூறினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், உண்மையில் நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத் தெரியும் என்று உதயநிதி கூறியது தான் மிகப்பெரிய காதுகுத்து என்றார்.

அமைச்சர் ராஜ்மோகன் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தி.மு.க. உறுப்பினர் ஜாபர் சாதிக் பல கோடி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலை மாணவி வழக்கின் FIR-ஐ ஆன்லைனில் பதிவிட்டு அவரது அடையாளத்தை வெளிப்படுத்தியது தி.மு.க. அரசு.

புகாரளித்த அரைமணி நேரத்தில் மாணவி பெயர், வீட்டின் முகவரியை வெளியிட்டு வரை தி.மு.க. அரசு அவரை அச்சுறுத்தியது. தி.மு.க. ஆட்சியில் குற்றங்களே நடக்காதது போல் நாடகம் ஆடினார்கள்.

த.வெ.க. ஆட்சியில் குற்றங்களை தடுக்க வரலாற்றில் முதன்முறையாக சிங்கப்பெண் அதிரப்படை உருவாக்கப்பட்டது. தரமான பதிலடி முதலமைச்சர் மூலமாக தரப்படும். போன வருடம் நடைபெற்ற சட்டசபையில் துணை முதலமைச்சர் அவைக்கு வரவே இல்லை. அவருக்கு பதில் அன்றைய முதலமைச்சரே எழுந்து நின்று அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் மானியக்கோரிக்கையை நானே வாசிக்கிறேன் என்றார்.

மேலும், மெரினாவுக்கு எப்படி பூட்டு போடுவது என சொல்லிக்கொடுத்தது முந்தைய தி.மு.க. அரசு தான். கடந்த 5 ஆண்டுகளாக மெரினாவுக்கு பூட்டு போடுவதில் PHD செய்தவர்கள் தி.மு.க. தான். தி.மு.க. ஆட்சியில் மெரினா கடற்கரையில் எந்த போராட்டத்திற்கு அனுமதி அளித்தார்கள் என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் அவைக்கு சரியாக வருவதில்லை என அமைச்சர் கூறினார், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளேன், பாருங்கள். அமைச்சர் ராஜ்மோகனின் வரவலாறு எங்களுக்கு தெரியும். பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் அமைச்சராவதற்கு முன்பு திமுகவை ஆதரித்து பல மேடைகளில் பேசினார். தற்போது தவெகவில் இருப்பதால் அமைச்சர் ராஜ்மோகன் மாற்றி பேசி வருகிறார் என்றார்.

இதனிடையே பேசிய ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டிற்கு முதலமைச்சர் பதலளிக்க கால அவகாசம் உள்ளது. நான் பதிலளிக்கும் போது யாரும் ஒடிவிடக்கூடாது என முதலமைச்சர் கூறிய வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

அந்த வார்த்தையை எல்லாம் நீக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நிராகரித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com