மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 6 நாட்கள் பிரசாரம்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 24, 25 மற்றும் அக்டோபர் 3-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on
Summary

அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் கே. பானுமதியும் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற ராஜினாமா செய்த இந்த இரண்டு தொகுதி எம்.எல்.ஏ.க்களும், த.வெ.க. சார்பில் போட்டியிடுகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி 6 நாட்கள் தேர்தல் பிரசாரம்

அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் கே. பானுமதியும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இரண்டு தொகுதிகளிலும் தலா 3 நாட்கள் என 6 நாட்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 24, 25 மற்றும் அக்டோபர் 3-ந்தேதி என மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 27, 28 மற்றும் அக்டோபர் 2-ந்தேதி என மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் வழித் தடங்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளார்.

த.வெ.க. வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக சார்பில் அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் கே. மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலர் பி. சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுகின்றனர்.

தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் இ. பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா ஆகியோர் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com