தவெக ஆட்சியில் வாழ்வது மோசமான திகில் திரைப்படத்தில் வாழ்வதைப் போல உள்ளது - கனிமொழி

அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ, யார் என்ன செய்வார்களோ என்ற பதற்றத்திலேயே மக்கள் இருக்க வேண்டியிருக்கிறது.
kanimozhi mp
Published on: 

தவெக ஆட்சியில் வாழ்வது ஒரு மோசமான திகில் திரைப்படத்தில் வாழ்வதைப் போல இருக்கிறது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுக்கு தெரியாமல் அணையில் நீர் திறப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் உள்ள சோத்துப்பாறை அணையில் அதிகாரிகளுக்கு தெரியாமல், தவெக கட்சியினர் தண்ணீர் திறந்துவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நீர்வளத்துறை சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சோத்துப்பாறை அணையில் இருந்து முறையான அரசு உத்தரவு அல்லது அதிகாரிகளின் அனுமதி இன்றி தவெக நிர்வாகிகள் சிலர் கால்வாய் மதகைத் திறந்து தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். பின்னர், வெளியேறிய நீரில் மலர் தூவி வரவேற்றதோடு, அதனை ரீல்ஸ் (ரீல்ஸ்) வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்

அரசியல் எதிர்வினைகள்

அரசின் விதிமுறைகளை மீறி அதிகாரிகளுக்கே தெரியாமல் அணையில் நீர் திறக்கப்பட்ட செயலுகு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனங்களை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி இந்த ஆட்சியில் யார் என்ன செய்வார்களோ என்ற பதற்றத்திலேயே மக்கள் இருக்க வேண்டியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே தவெக நிர்வாகிகள் திறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிமுறைகளையும் மதிக்க தேவையில்லை என்று நினைத்துவிட்டார்கள் போல

தவெக ஆட்சியில் வாழ்வது ஒரு மோசமான திகில் திரைப்படத்தில் வாழ்வதைப் போல இருக்கிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ, யார் என்ன செய்வார்களோ என்ற பதற்றத்திலேயே மக்கள் இருக்க வேண்டியிருக்கிறது.

என்று தெரிவித்துள்ளார்.

X