சோத்துப்பாறை அணையில் அதிகாரிகளுக்கு தெரியாமல் நீர் திறக்கப்பட்ட விவகாரம்: தொடர்புடையோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

ஒரு அணையை திறந்துவிடுவது என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல.
Edappadi Palaniswami
Published on: 

சோத்துப்பாறை அணையில் இருந்து அதிகாரிகளுக்கு தெரியாமல் நீர் திறந்துவிட்ட விவகாரத்தில் தொடர்புள்ள தவெக வினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுக்கு தெரியாமல் அணையில் நீர் திறப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் இருந்து அதிகாரிகளுக்கே தெரியாமல் நீர் திறக்கப்பட்ட விவகாரத்தில், நீர்வளத்துறை (பொதுப்பணித்துறை) அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் .முறையான அரசாணை மற்றும் முன்னறிவிப்பு இன்று தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் அணையின் மதகைத் திறந்து விட்டதாக இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஒரு அணையை திறந்துவிடுவது என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல. அணையில் இருந்து அதிகளவு வரும் நீர் கரையோரம் உள்ள மக்களுக்கும் நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல், ஆட்சிக்கு வந்துவிட்ட மோகத்தில், ரீல்ஸ் வெறியில் குதியாட்டம் போட்டுக்கொண்டு மக்கள் உயிரோடும் ஜீவாதாரத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கும் கட்சியினருக்கும் அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து அதிகாரிகளுக்கே தெரியாமல், தவெக கட்சியினர் தன்னிச்சையாக தண்ணீரை திறந்து விட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

சோத்துப்பாறை அணையில் இருந்து ஆயக்கட்டு புது வாய்க்கால் வழியாக 1000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் திறந்துவிட 90 நாட்களுக்கான நீர் இருப்பு இருக்க வேண்டிய நிலையில், தேவையான நீர் இருப்பு இல்லாததால் அதிகாரிகள் அணை திறக்க அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது .

இதனால், தன்னிச்சையாக பெரியகுளம் தவெக MLA சபரி ஐங்கரன் வழிகாட்டுதலில் தேனி வடகிழக்கு தவெக மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி என்பவர் தலைமையில் தவெக கட்சியினரே அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டு,

அந்த ரீலை எடிட் செய்து வெளியிட Late ஆகும் என்பதாலோ என்னமோ, Raw footage உடன் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

கடந்த 6 மாதங்களாக தவெக ஆச்சரியக்குறிகள் செய்யும் கூத்துகளையும் கோமாளித்தனங்களையும் பார்த்து, தமிழக மக்கள் தலையில் அடித்துக் கொண்டே சிரிக்கிறார்கள்

திரைப்பட நகைச்சுவை ஒன்றில் நடிகர் செந்தில் “petromax” லைட்டில் உள்ள மேண்டிலை நசுக்கிவிட்டு, “இதுல எப்படி அண்ணே எரியும்?” என்று கேட்பது போல, பல பர்னிச்சர்களை உடைத்து வருகின்றனர் இன்றைய ஆளுங்கட்சியினர்.

இப்படி Design Design-ஆக பிரச்சினைகளைஇழுத்துவிடும் இந்த Parallel Universe ஆச்சரியக்குறிகளிடம் இருந்துமக்களைக் காப்பதா?கலெக்டரைக் காப்பதா?அணையைக் காப்பதா?என்று நம்மை எல்லாம் குழப்ப வைத்தது தான் தவெக அரசின் மாபெரும் “வெற்றி”

சாதரணமாக கடந்து போகும் விஷயம் கிடையாது

ஒரு அணையை திறந்துவிடுவது என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல. அணையில் இருந்து அதிகளவு வரும் நீர் கரையோரம் உள்ள மக்களுக்கும் நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல், ஆட்சிக்கு வந்துவிட்ட மோகத்தில், ரீல்ஸ் வெறியில் குதியாட்டம் போட்டுக்கொண்டு மக்கள் உயிரோடும் ஜீவாதாரத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கும் கட்சியினருக்கும் கடும் கண்டனம்.

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சோத்துப்பாறை அணையை திறந்துவிட்ட விவகாரத்தில் தொடர்புள்ள அனைத்து தவெக-வினர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்.

என்று தெரிவித்துள்ளார்.

X