

தி.மு.க. செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சுமார் 20 மாவட்ட செயலாளர்கள் பதவி இழக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை கொண்டுக்வர அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இந்த விறுவிறுப்பான சூழ்நிலையில் தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக, கிளைச் செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை பதவி வகிப்போருக்கு வயது வரம்பு விதிக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட செயலாளர் பதவிக்கு 70 வயது என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்த்தால் 13 தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் பதவி பறிபோகும் என தெரிகிறது. ஏனென்றால் இவர்கள் 13 பேரும் 70 வயதை கடந்தவர்கள் ஆவார்கள்.
இதேபோல், மாவட்ட செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக 3 முறைக்கு மேல் அந்தப் பதவியில் இருக்கமுடியாது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடுத்த 15 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது தி.மு.க.வில் 70 வயதிற்கு மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் 15 ஆண்டுகள் பதவி வகித்தவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன.
காஞ்சிபுரம் வடக்கு: தா.மோ.அன்பரசன்-66 வயது, 25 ஆண்டு
காஞ்சிபுரம் தெற்கு: சுந்தர்-71 வயது
தூத்துக்குடி தெற்கு: அனிதா ராதாகிருஷ்ணன் - 74 வயது
நெல்லை மேற்கு: ஆவுடையப்பன்-81 வயது, 28 ஆண்டு
மதுரை மாநகர்: கோ.தளபதி-70 வயது, 18 ஆண்டு
மதுரை வடக்கு: மூர்த்தி-67 வயது, 27 ஆண்டு
சிவகங்கை: பெரியகருப்பன்-66 வயது, 27 ஆண்டு
விருதுநகர் தெற்கு: சாத்தூர் ராமச்சந்திரன்-77 வயது, 26 ஆண்டு
அரியலூர்: எஸ்.எஸ்.சிவசங்கர்-55 வயது, 20 ஆண்டு
புதுக்கோட்டை தெற்கு: ரகுபதி - 72 வயது
திருவாரூர்: பூண்டி கலைவாணன்-62 வயது, 19 ஆண்டு
தஞ்சை வடக்கு: அன்பழகன் - 72 வயது
தேனி தெற்கு: கம்பம் ராமகிருஷ்ணன் - 77 வயது
திருப்பூர் மத்தியம்: செல்வராஜ் - 70 வயது
ஈரோடு தெற்கு: முத்துசாமி - 77 வயது
சேலம் கிழக்கு: எஸ்.ஆர்.சிவலிங்கம் - 75 வயது
கடலுர் கிழக்கு: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்-68 வயது, 34 ஆண்டு
விழுப்புரம் வடக்கு: செஞ்சி மஸ்தான் - 71 வயது
திருவண்ணாமலை தெற்கு: ஏ.வ.வேலு - 75 வயது
ராணிப்பேட்டை: ஆர்.காந்தி-80 வயது, 30 ஆண்டு