தவெக ஆட்சியில் திக்திக் நிமிடங்களில் தமிழ்நாட்டு - கனிமொழி

செஞ்சியில் காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.
Kanimozhi
Published on: 
Summary

தாய்மாமன் சீர் எல்லாம் அறிவித்தார்கள். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க தாய்மாமனை காணவில்லை. தூங்குகிறாரா? என தெரியவில்லை என்று கனிமொழி கூறி உள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களை செய்தால் த.வெ.க. அரசு பாதுகாக்கும் என சிலர் நினைக்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்களுக்கு தான் இப்போது திக் திக் என்று இருக்கிறது. குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கில் த.வெ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

செஞ்சியில் காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.

தாய்மாமன் சீர் எல்லாம் அறிவித்தார்கள். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க தாய்மாமனை காணவில்லை. தூங்குகிறாரா? என தெரியவில்லை

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com