

காலனிய ஆட்சியால் உரிமைகள் பறிக்கப்பட்ட சமூகங்களின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றுவோம்! என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64-ஆவது குருபூஜை விழாவையொட்டி, திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நேதாஜியுடன் இணைந்து ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகக் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் திருமகனாரின் பிறந்தநாளில், அவரது தியாகத்தை நினைவுகூர்வோம்.
காலனிய ஆட்சியால் உரிமைகள் பறிக்கப்பட்ட சமூகங்களின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றுவோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.