

தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, நான்கு நாட்களில் ஏழு கொலைகள் நடந்துள்ளன. கனிமொழி எம்.பி. முத்துநகரம் 'கொலை நகரம்' ஆகும் நிலையைத் தவிர்க்க, காவல்துறையை திறமையானவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தி.மு.க. எம்.பி. கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நேற்றைய தினம் தூத்துக்குடி கந்தன் காலனியில், வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நான்கு நாட்களில் ஏழு கொலைகள் எனத் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ‘முத்துநகரம்’ என்று அழைக்கப்படும் தூத்துக்குடியை, ‘கொலை நகரம்’ என்று அழைக்கும் நிலைக்குக் கொண்டு செல்கிறது தவெக அரசு.
மீண்டும் சொல்கிறேன்… முதலமைச்சர் விஜய் அவர்கள் மக்கள் மீது கருணை காட்டி, காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்த ஒருவரிடம் அதன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்! என்று கூறியுள்ளார்.