

எந்த மதமாக இருந்தாலும் அவர்களின் மத உணர்வை புண்படுத்துவது மிக தவறு. கையில் உள்ள துறைகளை வைத்து இந்த அரசு அச்சுறுத்துகிறது.
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மகளிர் உரிமை ஆணையம் இன்று தாமாக வந்து விசாரிக்கிறது. டி.ஜி.பியிடம் விளக்கம் கேட்டுள்ளது. அவர் என்ன பதில் அளிக்கப் போகிறார். இதில் கலெக்டருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் என்ன செய்வது. நாங்கள் கேள்வி கேட்டால் தவறு என்கிறார்கள். இப்பொழுது மகளிர் ஆணையம் கேட்கிறதே என்ன செய்யப் போகிறார்கள். காவல் நிலையத்தில் ஆய்வு செய்வதற்கு சம்பந்தப்பட்ட முதல் அமைச்சர் தவிர மற்ற யாரும் அங்கு ஆய்வு செய்ய போவதற்கு அனுமதி இல்லை.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீஸ் நிலையத்திற்கு சென்று அமைச்சர் ஆய்வு செய்கிறார் அங்கு பெண் காவலர்களின் மொபைல் போனை ஆய்வு செய்தது தவறு, திருச்செந்தூரில் விஜய்க்கு அரோகரா கோஷம் எழுப்பியது இந்துக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது, அனைத்திற்கும் வழக்கு தொடுக்கும் விஜய் அரசு இதற்கு என்ன செய்யப் போகிறது? எந்த மதமாக இருந்தாலும் அவர்களின் மத உணர்வை புண்படுத்துவது மிக தவறு. கையில் உள்ள துறைகளை வைத்து இந்த அரசு அச்சுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.