

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மிதமானது மற்றும் கனமழை பெய்து உள்ளது.
இந்த நிலையில் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, ஆகிய 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதே போல டெல்டா மாவட்டங்கள், கடலூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் மழை குறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.