

பா.ம.க. சட்டமன்ற குழு தலைவரும், பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவருமான சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. இன்று நெல்லை டவுன் குறுக்குத்துறை பகுதியில் பாயும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வரும் தாமிரபரணி ஆற்றை நாம் பாதுகாக்க தவறிவிட்டது மன வேதனை அளிக்கிறது.
ஜெர்மன் நிதி உதவி என்ற பெயரில் கடன் பெற்று தாமிரபரணியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள நிதி பெறப்படுகிறது. 7 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைமேடை மற்றும் பூங்கா அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது வேதனை அளிக்கிறது.தாமிரபரணி நதியின் இந்த நிலை குறித்து அனைத்து விதமான அமைப்புகளும் வேதனைப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்துள்ளன. அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறோம். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு முடிவை எடுக்கும். காங்கிரஸ் கட்சி ஒரு முடிவு எடுத்து, அவர்கள் ஒரு கூட்ட ணியுடன் போட்டியிடு கிறார்கள். கம்யூனிஸ்டு கட்சி ஒரு முடிவு எடுத்து தனியாக போட்டி யிடுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கும் ஆதரவு தரப்போவதில்லை என எங்கள் கட்சித் தலைவர் அறிவித்தார்.
பொது வேட்பாளரை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு வெளி யிட்டார். ஆனால், அந்த ஆலோசனையின்படி பொது வேட்பாளர் நிறுத்தப்படாத நிலையில், எங்கள் ஆதரவு யாருக்கும் இல்லை என்ற அறிவிப்பு பா.ம.க. சார்பில் வெளியிடப்பட்டது.
மதுராந்தகம் மக்கள் பா.ம.க. பக்கம் இருப்பார்கள் என்ற அடிப்படையிலேயே இந்த முடிவை அன்புமணி ராமதாஸ் எடுத்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க. தொடர்கிறது. தேர்தலில் யாருக்கு ஆதரவு அல்லது ஆதரவு இல்லை என்பதை கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.பொது வேட்பாளராக இருந்திருந்தால் நிச்சயமாக பிரச்சாரத்திற்கு பா.ம.க. சென்றிருக்கும்.
கடந்த தேர்தலில் விஜய் கட்சி தலைவராக இருந்தார். அதனால்தான் 10 இடங்களுக்கு மட்டும் சென்று கடந்த தேர்தலில் பிரசாரம் செய்தார். இப்போது முதல்-அமைச்சராக இருப்பதால் கூடுதல் இடங்களுக்கு செல்கிறார்.
என்று தெரிவித்தார்.